New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

சூடானுக்கு பயணிப்பதை தவிருங்கள்… கனேடியர்களுக்கு அறிவுறுத்தல்

April 13, 2019 21 0 0

கனேடியர்கள் சூடானுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு கனேடிய வெளிவிவகார அமைச்சு, அறிவுறுத்தியுள்ளது.

சூடானில் அரசியல் குழப்ப நிலைக் காரணமாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கனேடியர்கள் சூடானுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு கனேடிய வெளிவிவகார அமைச்சு, அறிவுறுத்தியுள்ளது.

சூடானில் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த ஒமார் அல் பஷிர் தலைமையிலான அரசாங்கம் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கே இருந்த கனேடிய தூதரகத்தை மூடுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கே இராணுவம் எந்த நேரத்திலும் எவரையும், எந்தப் பகுதியிலும் தேடுதல்களை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரிலோ, குற்றச் செயல் என்று குற்றஞ்சாட்டியோ கைது செய்ய முடியும் என்பதுடன், போக்குவரத்து மற்றும் பிரயாண தடைகளையும் ஏற்படுத்த முடியும் என்பதால், கனேடியர்களுக்கு கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும், கனேடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில், “இவ்வாறான நிலையில் அங்கே எந்த வேளையிலும் திடீரென பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம். எனவே அங்கே உள்ள கனேடியர்கள் முடிந்தவரை நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நிலைமை ஓரளவுக்கேனும் சீரடையும் வரையில் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருங்கள். அத்தியாவசிய தேவைகளான நீர், உணவு என்பவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் இருங்கள். தத்தமது பிரயாண ஆவணங்களை சரிபார்த்து தயாராக வைத்திருங்கள்” என கனேடிய வெளிவிவகார அமைச்சு அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Tags: அறிவிக்கை., கனேடியர்கள், நிலைமை, பாதுகாப்பு, வெளிவிவகாரம் Categories: canada
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *