New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

ரஜினியின் தர்பார் படத்தில் பாடல் எழுதுகிறாரா விக்னேஷ்சிவன்

April 14, 2019 1 0 0

ரஜினியின் தர்பார் படத்தில் ஒரு பாடலை இயக்குனர் விக்னேஷ்சிவன் எழுதுவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் – விக்னேஷ் சிவன் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இவர்களது கூட்டணியில் உருவாகிய பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தில் விக்னேஷ் சிவன் வரியில் பாடல்கள் இல்லை என்ற குறை இருந்தது. அது தர்பார் படத்தின் மூலம் நிறைவாக உள்ளதாம். தர்பார் படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ஒரு பாடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி, தர்பார், பொங்கல், விக்னேஷ்சிவன், பாடல்.

Tags: தர்பார், பாடல்., பொங்கல், ரஜினி, விக்னேஷ்சிவன் Categories: Cinema, muthalvan-headlines
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *