New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

ரகசிய திருமணம் செய்து கொண்டேன்… அறிவித்த நடிகை மேக்னா நாயுடு

April 14, 2019 2 0 0

டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார் நடிகை மேக்னா நாயுடு.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா நாயுடு டென்னிஸ் வீரரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு.

தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
“எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். நட்பு பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம்.

எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்.”

இவ்வாறு மேக்னா நாயுடு கூறினார்.

Tags: அறிவிப்பு, டென்னிஸ் வீரர், நடிகை, மேக்னா நாயுடு, ரகசிய திருமணம் Categories: Cinema
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *