New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

தேர்தல் பிரசாரத்தை அச்சத்துடன் மேற்கொள்ளும் மோடி… ப.சிதம்பரம் டுவிட்

April 15, 2019 4 0 0

அச்சத்துடன்தான் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது:

மோடி நாடு முழுவதும் சென்று, சாதனைகள் எனக் கூறிக் கொண்டு சுயதம்பட்டம் அடிக்கிறார். அப்படியே அவரது உண்மையான சாதனைகளான பண மதிப்பிழப்பு, சிறு மற்றும் குறு தொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலையிழந்தது, பெண்கள், தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், என்ஜிஓ.,கள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்று இருப்பது ஆகியவை குறித்தும் பேசலாமே.

பிரதமர் ஏன் நாளுக்கு நாள் குரலை உயர்த்தி பேசி வருகிறார்? தனது ஆட்சி போய்விடும் என்ற பயத்துடன் பிரசாரம் செய்வதாலா? தமிழ்நாட்டில் பேசிய மோடி பேசாத பொருள்களைப் பட்டியலிடுங்கள்.
1. நீட் தேர்வு 2. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 3. நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம் 4.அஇஅதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: டுவிட்டர், ப.சிதம்பரம், பிரசாரம், பிரதமர் மோடி Categories: indianews
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *