New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

பொய் பேசுகிறார் பிரமர் மோடி… முதல்வர் குற்றச்சாட்டு

April 15, 2019 1 0 0

பொய் பேசுகிறார் பிரதமர் மோடி என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர்.

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் பேசுகிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். சபரிமலை விவகாரம் தொடர்பாக பேசினாலே, பினராயி தலைமையிலான அரசு, பக்தர்களை கைது செய்வதாக, பிரதமர் மோடி, பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பினராயி, சபரிமலை விவகாரத்தில் பிரதமர் மோடி பேசியது பச்சை பொய். தவறான தகவல்களை தந்துள்ள பிரதமர், மக்களை தவறாக வழிநடத்துகிறார். தவறான செயல்கள் செய்திருப்பவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

லோக்சபா தேர்தல் பிசாரத்தின் போது எந்த ஒரு அரசியல் கட்சியும் சபரிமலை விவகாரத்தை பேசக்கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: சபரிமலை, தேர்தல் கமிஷன்., பிரதமர் மோடி, விவகாரம் Categories: indianews, muthalvan-headlines
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *