New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

சாத்தியமே இல்லை… சாத்தியமே இல்லை… மத்திய அமைச்சர் சொல்றார்

April 15, 2019 33 0 0

சாத்தியமே இல்லை… சாத்தியமே இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்ற காங்கிரசின் ‘நியாய்’ திட்டம் சாத்தியம் இல்லாதது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:

பொருளாதாரம் மற்றும் நிதி திட்டங்கள் ரீதியாகவும், காங்கிரசின் ‘நியாய்’ திட்டம் பேரழிவு திட்டம். மக்களின் சம்பளம் மற்றும் வருமான அளவு குறித்த விவரம் ஏதும் இல்லாததால் இந்த திட்டம் சாத்தியம் இல்லாதது. பலூன் போல், இந்த அறிவிப்பு வெடித்துவிடும்.
பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடக்கும்.

அக்கட்சியில் பிரபலமான ஊழல் பட்டியலில் புதிதாக ஒன்று சேரும். வெற்று கோஷங்கள் மூலம் மக்களை முட்டாள் ஆக்க முடியும் என்ற பழைய மனநிலையிலேயே காங்கிரஸ் உள்ளது. ஆனால், கவர்ச்சிகரமான கோஷங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.

அக்கட்சி தலைவர்கள் 3 தலைமுறைகளாக பெரிய வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றினர். ஆனால், ஊழலில் ஈடுபட்டதுடன், உறுதியில் சராசரிக்கும் கீழேயே நிறைவேற்றினர். இந்திய மக்கள் புத்திசாலிகள். இனியும், பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டார்கள். குறிப்பாக வெற்று கோஷம், பெரிய வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள்.

நாட்டின் வளர்ச்சிக்காக மோடி அரசு பாடுபட்டதுடன், 130 கோடி மக்களும், சுயமாகவும், கவுரமாகவும் வாழவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் உழைத்துள்ளோம். எங்களை பொறுத்தவரை அனைவரும் உயரத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், காங்கிரஸ் அனைவரும் கீழே செல்ல வேண்டும் என கருதுகிறது.

இந்தியா தற்போது வேகமாக வளரும் நாடு. உலகில் 5வது பெரிய பொருளாதார நாடு. இது வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் சாத்தியம் ஏதும் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம். இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்னும் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: உள்கட்டமைப்பு, காங்கிரஸ், சாத்தியம் இல்லை, மறைமுகம். Categories: india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *