New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

மணல் கடத்தல்… மத்திய அரசு மற்றும் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்

July 24, 2019 17 0 0

5 மாநிலங்களுக்கு நோட்டீஸ்…மணல் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனு மீது பதிலளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில், ”தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஒரு கோடி மெட்ரிக் டன் மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக செய்திகள் வருகிறது. இதனால் நீர்வளமும், நில வளமும் பாதித்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.

இதேபோல், கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, உள்ளிட்ட படுகைகளிலும் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்று கோரியுள்ளார்.

இந்த மனு சுப்ரீம்கோர்ட் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன் விசாரணைக்கு வந்தது. அவர், மனு மீது மத்திய அரசும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், பஞ்சாப், மத்தியப்பிரதேசம் ஆகிய அரசுகளும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Tags: அள்ளுபவர்கள்., சட்டவிரோதமாக மணல், சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் Categories: india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *