New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

கனிமச் சத்துக்கள் நிறைந்த நல்லெண்ணெய்… செரிமானத்திற்கு உதவுகிறது

கனிமச்சத்துக்கள் நிறைந்த நல்லெண்ணெய்யில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள். எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும். நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் […]

August 11, 2019 75 0 0

பெண்களை அதிகம் சோதிக்கும் எலும்பு தேய்மான நோய்…கால்சிய குறைபாடால் ஏற்படுகிறது

ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. எலும்பு தேய்மானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. எலும்புகள் உறுதியானதாக அமைய […]

August 11, 2019 64 0 0

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த அமித்ஷா

புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருகை… துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வந்தார். சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவர்னர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமித்ஷா தலைமையில் நடைபெறும் பாஜ […]

August 11, 2019 59 0 0

கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்

வெடி வெடித்து கொண்டாட்டம்…ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு என பல பகுதிகளிலும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வெடி வெடித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்படி, யாழ். நகரில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் வெடி வெடித்தனர்.

August 11, 2019 60 0 0

தமிழ் மக்களின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு…ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ சொல்றார்

தமிழ் மக்களின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு…தனது அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு முன்வைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, சர்வதேசம் நாட்டின் சுயாதீனத்தில் தலையிடுவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் வேட்பாளர் அறிவிப்பைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் […]

August 11, 2019 64 0 0

கல்முனை பிராந்தியத்தில் இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்…கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடனான இந்த இலவச மருத்துவ முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரிய நீலாவணையில் நடைபெற்றது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் உட்பட வைத்தியர் குழுவினர் இதில் பங்குபற்றியதுடன் நோயியல் நிபுணர்கள் நோய்களுக்கான வைத்திய பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். இந்த வைத்திய முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

August 11, 2019 39 0 0

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த பெண் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணிடம் இருந்து கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையிலிருந்து – கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டார். குறித்த 37 வயதுடைய இந்தியப் பெண்ணிடம் 1.25 கிலோக்கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் இருந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

August 11, 2019 50 0 0

உடை, முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்படாது… பிரதமர் ரணில் பேச்சு

மாற்றம் ஏதும் ஏற்படாது…உடை மற்றும் முகத்தை மாற்றுவதால் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். குருநாகலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் விசேட சக்தி ஏதும் கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக […]

August 11, 2019 47 0 0

நிலச்சரிவின் போது அதிர்ஷ்டவசமாக தப்பியவர் வீடியோ வைரல்

நிலச்சரிவின் போது ஒருவர் உயிர் தப்பிய காட்சிகள்…கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. கேரள மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் எர்ணாக்குளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து இங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என […]

August 11, 2019 67 0 0

பைக்கின் அலார சத்தத்திற்கு ஏற்ப அட்டகாச நடனம் ஆடும் சேட்டை பொடியன்

சிறுவன் செய்யும் அட்டகாச சேட்டைங்க… பார்த்து… பார்த்து… விழுந்து, விழுந்து சிரிக்க செய்கிறான். என்ன தெரியுங்களா? மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் பைக் அலாரம் சத்தத்திற்கு ஏற்ப சிறுவன் ஒருவன் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாகனங்களை யாராவது முறைகேடாக ஆன் செய்ய நினைத்தாலோ அல்லது திருட முயற்சி செய்தாலோ எச்சரிக்கை விடுக்கும் அலாரம் அதில் பொருத்தப்பட்டிருக்கும். இதனால் வாகனத்தின் உரிமையாளர்கள் உஷாராகி கொண்டு தங்கள் வாகனத்தை […]

August 11, 2019 249 0 0