New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

ஈட்டோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்

August 20, 2019 17 0 0

துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயம்… ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிக்சன் வீதி மற்றும் கிப்ளிங் அவனியூ பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட பெண் உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சிகிச்சை பெற்றுவரும் அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், குறித்த அந்தப் பெண் மீதான இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கறுப்பு நிற SUV ரக வாகனம் ஒன்றில் தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருவதாக மட்டும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: சந்தேக நபர், தப்பியோட்டம்., துப்பாக்கிச்சூடு., படுகாயம்., பெண் Categories: canada
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *