New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

காரில் இருந்தவர் மீது இனந்தெரியாத ஒருவர் பல முறை துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்… ரெக்ஸ்டேல் பிளாசாவிற்கு முன்பாகவுள்ள வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Islington Avenue and Rexdale Boulevard பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிளாசாவின் முன்பாகவுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த காரில் இருந்தவர் மீது இனந்தெரியாத ஒருவர் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுட்டதன் பின்னர் துப்பாக்கிதாரி இஸ்லிங்டன் அவென்யூவில் இருந்து தெற்கு நோக்கி தப்பிச் சென்றுள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவரை […]

September 15, 2019 77 0 0

பரோல் முடிந்தது… கண்ணீர், வேதனையுடன் சிறைக்கு திரும்பிய நளினி

மகள் வராததால் ஏமாற்றத்துடன் சிறைக்கு திரும்பும் நளினி… லண்டனிலிருக்கும் மகள் வருகை தராதமையினால் அவரது திருமண ஏற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்று விட்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி-முருகன் தம்பதியரின் மகளான ஹரித்ரா லண்டனில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு, திருமணம் செய்து வைக்கவே ஆறு மாதங்கள் பிணையில் செல்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி அனுமதி கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற […]

September 15, 2019 47 0 0

செம மாஸ்… இசை வெளியீட்டு போஸ்டரில் செம மாஸ் காட்டும் விஜய்

சென்னை: செம மாஸ்… பிகில் படத்தின் இசை வெளியீட்டை ஒட்டி வெளியான போஸ்டரில் செம மாஸ் ஆக உள்ளார் விஜய். பிகில் படத்தோட இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 19 தேதி அன்று ரொம்பவும் கிராண்டாக நடக்கவுள்ளது ஏற்கனவே வெளியான சிங்க பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் . அதனை தொடர்ந்து பிகில் படம் ஆடியோ லாஞ்ச் போஸ்ட்ர் இன்னைக்கு 4 மணிக்கும் வெளி ஆகும் சொன்ன நிலையில் இப்போ போஸ்டர் […]

September 15, 2019 55 0 0

குடும்ப வறுமையால் கள் இறக்கும் பணியில் ஈடுபடும் இளம் பெண்

கள் இறக்கும் பணியில் ஈடுபடும் பெண்… குடும்ப வறுமை காரணமாக, கேரளாவில் பெண் ஒருவர் கள் இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். கண்ணூர் மாவட்டம் பண்ணியோடு பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஷூபா. இவரது கணவர் பனையேறும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சாலை விபத்தில் அவர் படுகாயமுற்றதை அடுத்து, குடும்ப வறுமுறையை போக்க ஷீபா இந்த பனையேறும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கத்தில் இந்த தொழிலை கற்றுக்கொள்வது சற்று சிரமமாக இருந்த போதிலும், தொடர் விடா […]

September 15, 2019 66 0 0

முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயத்துடன் சென்ற சிறுத்தை

முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்ற சிறுத்தை… நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. இங்குள்ள முத்தங்கா என்ற வனப்பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புக் கருதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சுல்தான் பத்தேரியில் இருந்து குண்டல்பேட் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று […]

September 15, 2019 73 0 0

அண்ணா பிறந்த நாளை ஒட்டி மாவட்ட தலைநகரங்களில் விரைவு மிதிவண்டி போட்டி

விரைவு மிதிவண்டி போட்டி… பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற விரைவு மிதிவண்டி போட்டியில், பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நெல்லை பாளையங்கோட்டையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விரைவு மிதிவண்டி போட்டியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர் துரை தொடங்கிவைத்தார். மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் என இரு பிரிவாக நடந்த இப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். […]

September 15, 2019 58 0 0

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணையை உடன் திரும்ப பெற திமுக தலைவர் வலியுறுத்தல்

திரும்ப பெற வேண்டும்… ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பள்ளிக்குள் நுழைவதிலிருந்து கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளியேறும் வரை, விதவிதமான பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும். எப்போதுமே 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறிவந்த நிலையில் திடீரென மத்திய அரசின் முடிவுப்படி பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய […]

September 15, 2019 43 0 0

தயிர், நெய் விலையையும் உயர்த்தி அறிவித்தது ஆவின் நிறுவனம்

பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்… ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, தயிர், நெய், பால்கோவா போன்ற பால் உப பொருட்களுக்கான விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வானது […]

September 15, 2019 49 0 0

ஏடிஎஸ்பி இளங்கோவிற்கு அண்ணா விருது அறிவிப்பால் கடும் சர்ச்சை

ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணாபதக்கம் அறிவிக்கப்பட்டது சர்ச்சையானது… சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஒன்றரை ஆண்டுகளாக எந்த பணியும் செய்யாமல் இருந்துவிட்டு, பொன்மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளித்த ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணாபதக்கம் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களான மன்னர் கால சிலைகளை வெளி நாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து காவல்துறைக்கு பெருமை சேர்த்து வரும் பொன் மாணிக்கவேலுவின் சிறப்பு புலனாய்வு குழுவில் ஏடிஎஸ்பியாக பொறுப்பில் இருந்த இளங்கோ மீது தான் இந்த புகார் […]

September 15, 2019 45 0 0

எம்.பி.,யாக சாந்த பண்டாராவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல்

சாந்த பண்டாராவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல்… ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டாரவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சாந்த பண்டார தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்திருந்தார். எனினும் குறித்த வெற்றிடத்திற்கு […]

September 15, 2019 48 0 0