New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

அழகான சருமத்திற்கு ரோஜா இதழ்கள் புது பொலிவை அளிக்கும்!!!

ரோஜா இதழ்கள் சருமத்திற்கு புது பொலிவை கொடுக்கும். ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம். ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய 5 வகை அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வோம். சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, […]

February 13, 2020 4 0 0

நாளை நடக்க இருந்த செயற்குழு கூட்டம் ரத்து; ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு

செயற்குழு கூட்டம் இரத்து… நாளை நடைபெறவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன, செயற்குழு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையே நடைபெறும் என கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாளை கூடவிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

February 13, 2020 5 0 0

42 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க முடிவு; உள்ளூர் உற்பத்தி சந்தையில்

புதிய வேலை வாய்ப்புகள்…விண்ட்சரில் உள்ளூர் உற்பத்தி வேலை சந்தையில் 42 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்ட்சருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே, மத்திய பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மெலானி ஜோலி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். விண்ட்சரில், லாவல் டூல் ரூ மோல்ட் லிமிடெட், துல்லிய ஸ்டாம்பிங் குழு மற்றும் எஸ்பிஎம் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் 42 புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய உபகரணங்களை வாங்குவதற்கும், நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும் அரசாங்கம் சுமார் 7 […]

February 13, 2020 6 0 0

மூன்று மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு: மானிட்டோபா அரசாங்கம் முடிவு

3 மில்லியன் டொலர்கள்… வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மானிட்டோபா அரசாங்கம், மூன்று மில்லியன் டொலர்களை ஒதுக்கவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வெள்ள தற்பாதுகாப்பு தயாரிப்புகள் அல்லது உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்காக இந்த தொகை செலவிடப்படவுள்ளது. இந்த தொகையினை மாகாணம், நகராட்சிகளுக்கு செலுத்தலாம். ஒவ்வொரு நகராட்சியும் 150,000 அமெரிக்கா டொலர்களையும், வின்னிபெக் நகராட்சி 500,000 பெற தகுதியுடையன. இதுகுறித்து நகராட்சி உறவுகள் அமைச்சர் ரோசெல் ஸ்கொயர்ஸ் கூறுகையில், ‘நகராட்சிகள் தங்கள் சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க சேதத்தைத் தடுக்க நடவடிக்கை […]

February 13, 2020 5 0 0

இயற்கை பேரழிவுக்கு என்ன காரணம்; பருவநிலை நெருக்கடியை உணராததுதான்!

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை…ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பருவநிலை நெருக்கடியை பொருட்படுத்தாதன் விளைவுதான் தற்போதைய இயற்கை பேரழிவுக்கு காரணம் என்றும் இது உலக நாடுகளுக்கான எச்சரிக்கை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தீவு கண்டமான ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டில் இருந்தே படிபடியாக உயர்ந்து வரும் வெப்பநிலை கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தைத் தொட்டது மட்டுமின்றி வரலாறு காணாத வறட்சிக்கும் பல்வேறு இடங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீக்கும் வித்திட்டது. இதன் விளைவால் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்கள் […]

February 13, 2020 4 0 0

13 தாலிபன் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை அதிரடி

13 தாலிபன் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலிபான் பயங்கரவாதிகள் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தி அவர்களின் பிடியில் உள்ள கிராமங்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், பெல்ஹம் மாகாணத்தில் உள்ள ஜர்-இ-குஷக் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது தாலிபான்களுக்கும், வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை […]

February 13, 2020 4 0 0

அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது; வீடியோ வைரல்

மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது… அண்டார்டிகாவில் மால்டா நாடு அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை கடலுடன் இணைக்கும் பல்வேறு பனிப்பாறைகளில் பைன் ஐலண்ட் கிளேசியரும் ஒன்று. பருவநிலை மாறுபாடு மற்றும் வெப்பமடைதல் காரணமாக இந்த கிளேசியர் கடந்த 25 ஆண்டுகளில் உடைந்து பெருமளவிலான பனிப் பாளங்களை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த கிளேசியரில் இரு பிளவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது பைன் லாண்ட் கிளேசியர் […]

February 13, 2020 2 0 0

ஒலிம்பிக் போட்டிகள் ரத்து இல்லை; டோக்கியோ கமிட்டி திட்டவட்ட அறிவிப்பு

டோக்கியோ: ரத்து செய்யும் திட்டமில்லை… கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 11 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஐப்பான் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்று அமைக்கப்படுள்ளதாக தெரிவித்தார். ஒலிம்பிக்கில் […]

February 13, 2020 2 0 0

தமிழர்கள் வாழும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு; கர்நாடகாவில் இன்று பந்த்

சரோஜினி மகிஷி அறிக்கையை அமல்படுத்த கோரி கர்நாடகாவில் இன்று பந்த் நடந்து வருகிறது. இதை ஒட்டி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, சரோஜினி மகிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கர்நாடக அரசு இதுவரை தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தரவில்லை. சரோஜினி மகிஷி அறிக்கையை […]

February 13, 2020 5 0 0

டால்பின்கள் சுட்டுக் கொலை; குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு

டால்பின்கள் சுட்டுக் கொலை… அமெரிக்காவில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 டால்பின்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புளோரிடா மாநிலத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் உடல்கள் கரை ஒதுங்கின. உயிரிழந்த 2 டால்பின்களும் துப்பாக்கியால் சுடப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் அவற்றின் உடலில் […]

February 13, 2020 4 0 0