New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

BLOG

சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணை

7 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு… ஹமில்ரனில் 7வயதுச் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய துப்பாக்கிதாரியைக் கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 20 வயதான ஜெய்டன் பீற்றர் என்பவரே, இவ்வாறு தேடப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் மிக ஆபத்தானவர் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாகத் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி 23ஆம் திகதி இரவு கார்டன் வீதியில் உள்ள ஒரு […]

February 14, 2020 2 0 0

வெகு தொலைவில் கடந்து செல்லும் குறுங்கோள்; பூமிக்கு பாதிப்பு இல்லை

பூமிக்கு பாதிப்பு இல்லை… விண்ணில் இருந்து அசுர வேகத்தில் வரும் குறுங்கோள் ஒன்று நாளை பூமியைக் கடந்து செல்ல உள்ளது. அந்தக் குறுங்கோள் மணிக்கு 54 ஆயிரத்து 717 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அந்த குறுங்கோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அந்தக் கோள் நாளை பூமியை கடந்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூமியிலிருந்து சுமார் 58 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் […]

February 14, 2020 3 0 0

மிகப்பெரிய நிலத்தடி மீன்களை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்

மிகப்பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிப்பு… மேகாலயாவில் உலகின் மிகப் பெரிய நிலத்தடி மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள ஜெய்ன்டியா மலைப்பகுதியில் ஸ்காட்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கிருந்த குகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்த போது, புதியவகை மீன்களைக் கண்டனர். இந்த மீன்கள் இமாலய ஆறுகளில் உள்ள கோல்டன் மஷீர் வகை மீன்களுடனான பண்புகளை ஒத்திருந்தன. ஆனாலும் இவை தனி இனமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி மீன் இனங்களிலேயே தற்போது பார்க்கப்பட்ட […]

February 14, 2020 1 0 0

குடிசைப்பகுதிகளை மறைத்து நீண்டசுவர்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொதுமக்கள் குற்றச்சாட்டு… அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத் வரை 500 முதல் 600 மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. 6 முதல் 8 அடி உயரம் வரை […]

February 14, 2020 1 0 0

பொதுத் தேர்தலுக்கு தயாராகுமாறு அமைப்பாளர்களுக்கு ரணில் ஆலோசனை

பொதுத் தேர்தலுக்கு தயாராகுங்கள்… நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்துத் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களை வலுப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். சிறிகொத்தவில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கட்சியைத் […]

February 14, 2020 2 0 0

யாருக்கு முக்கியத்துவம்; இவங்க கவுரவ பிரச்னையை எப்படி தீர்ப்பது… புலம்புகிறார் இயக்குனர்

இப்படி வசமாக மாட்டிக்கிட்டேனே என்று புலம்புகிறாராம் உச்ச நடிகரின் படத்தை இயக்கும் இயக்குனர். அப்படத்தில் நடிக்கும் நடிகைகளில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற பிரச்னையில்தான். உச்ச நடிகர் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு மனைவியாக இரண்டெழுத்து நடிகை, வில்லியாக மூன்றெழுத்து நடிகை, இன்னொரு மனைவியாக நம்பர் நடிகை, மகளாக வாரிசு நடிகை ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். படத்தில் பழைய கதாநாயகிகள் இரண்டு பேரும், மகள் வேடத்தில் வாரிசு நடிகையும் இருப்பதால் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ […]

February 14, 2020 1 0 0

சூரரை போற்று படம்தான் சிறந்தது; நடிகர் சூர்யா பெருமிதம்

என்னுடைய அனுபவத்தில் என் படங்களிலேயே இந்த சூரரை போற்று படம் தான் சிறந்தது என்று தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. தமிழ் திரையுலகில் நடிகனாக மட்டும் இல்லாமல் சக மனிதனாகவும் உதவி செய்து கொண்டு வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. அண்மையில் கூட இப்படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் மியூசிக் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று இப்படத்தின் வெய்யோன் சில்லி பாடல் லான்ச் விமான நிலையத்தில் நடைபெற்றது. அப்போது […]

February 14, 2020 0 0 0

இப்போது நாங்கள் நண்பர்கள் மட்டுமே; நயன்தாரா பற்றிய கேள்விக்கு சிம்பு பதில்

இப்போது நாங்கள் நண்பர்கள் மட்டுமே? சிம்பு யாரை பற்றி சொன்னார் தெரியுங்களா. தமிழ் சினிமாவில் சிம்பு படத்துக்காக அதிகம் பேசப்பட்டாரோ இல்லையோ, சர்ச்சையால் அதிகம் பேசப்பட்டார். ஆனால் அவர் சர்ச்சையை பற்றி அதிகம் கவலைப்படவில்லை, எது நடந்தாலும் ஓகே என அசால்டாக பிரச்சனைகளை சந்தித்தார். இப்போது படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார், அடுத்து அவரது நடிப்பில் வெளியாகும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் சிம்புவிடம் மீண்டும் நயன்தாரா காதலை வெளிப்படுத்தினால் என்ன செய்வீர்கள் […]

February 14, 2020 0 0 0

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து: கொரோனா தொற்று அச்சத்தால்

கொரோனாவால் ரத்து… தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலமான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உலக தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரும் மொபைல் போன் வர்த்தக விழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னணி தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்ததை தொடர்ந்து 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 2020 […]

February 14, 2020 0 0 0

200 கோடியை தாண்டியது; வாட்ஸ் அப் பயனாளர்கள் எண்ணிக்கை

வாட்ஸ் அப் செயலியின் புதிய சாதனை… உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் 200 கோடியை கடந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியை 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதைத் தொடர்ந்து 2017 ஜுலை மாதத்தில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது. பின் 2018-ம் ஆண்டிலேயே இது 150 கோடியாக அதிகரித்தது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை தற்சமயம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. […]

February 14, 2020 1 0 0