New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு; சபாநாயகரே முடிவு எடுப்பார்

February 14, 2020 1 0 0

தமிழக அரசுக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, காலக்கெடு விதிக்க முடியாது. அவரே முடிவெடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.முக., இரண்டாக பிரிந்தது. பன்னீர்செல்வம் தலைமையில், 11 எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட்டனர். இதையடுத்து, 2017 பிப்ரவரியில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரியது.

அப்போது, தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. இவர்கள் மீது சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, 11 பேரும் மீண்டும் இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

இதையடுத்து, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘சபாநாயகர் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுகிய, தி.மு.க., தரப்பு, இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி முறையிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், பிப்., 4 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசுக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் விஷயத்தில் முடிவு எடுக்க, சபாநாயகர் மூன்று ஆண்டுகளாக தாமதம் செய்தது ஏன். இந்த விஷயத்தில், மூன்று ஆண்டு தாமதம் என்பது தேவையில்லாத ஒன்று. இதில், தமிழக அரசு முடிவு என்ன என்பது குறித்து, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று(பிப்.,14) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. சபாநாயகருக்கு காலக்கெடுவும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில், சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

11 AIADMK MLAs Complete Elimination Case The Speaker will decide

Tags: அதிமுக எம்எல்ஏக்கள், தகுதி நீக்கம், வழக்கு Categories: headlines, india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *