New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

குட்டி கெஜ்ரிவாலுக்கும் அழைப்பு; ஆம் ஆத்மி பதவியேற்பு விழாவில் பங்கேற்க

February 14, 2020 2 0 0

டில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு, கெஜ்ரிவால் போல் வேடமணிந்து கலக்கிய, ஆவயன் தோமர் என்று சிறுவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், அந்த கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டில்லி முதல்வராக, 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால், 16ம் தேதி மீண்டும் பதவியேற்கிறார். அவ்விழாவில் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், டில்லியில் உள்ள கட்சி அலுவலகம் முன், ஏராளமான தொண்டர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அப்போது, கெஜ்ரிவால் போலவே, தொப்பி, மப்ளர் மற்றும் உடையணிந்து, ஒட்டு மீசை வைத்த, 1 வயதான ஆண் குழந்தை, அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

ஆம் ஆத்மி தொண்டரான ராகுல் தோமரின் மகன், ஆவயன் தோமர் தான், அந்த குழந்தை என, தெரியவந்தது. இந்நிலையில், கெஜ்ரிவால் முதல்வராக பதவி யேற்கும் விழாவுக்கு, அந்த குழந்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags: குழந்தை, கெஜ்ரிவால் வேடம், பதவியேற்பு விழா Categories: headlines, india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *