New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

அத்திக்கடவு – அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

February 14, 2020 1 0 0

பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அத்திக்கடவு – அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நிலமெடுக்க ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும். ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்த அனைத்து பஸ்களிலும் விரைவில் மின்னணு பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும்.

அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும். சென்னை பெங்களூரு தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

சேலம் மாவட்டம், புத்திரகவுண்டம்பாளையம், உமையாள்புரம் பகுதிகளில் 2 இடங்களில் சிப்காட் அமைக்கப்படும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ஒதுக்கீடு. முத்திரைதாள் வரி 1 சதவீதத்தில் இருந்து0.25 சதவீதம் குறைப்பு. ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்களும் 1 சதவீதத்தில் 0.25 சதவீதமாக குறைக்கும்.

ஈரோட்டில் மஞ்சள் மையம், தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம், நெடுஞ்சாலை துறையில் சாலை பாதுகாப்பிற்காக புது பிரிவு அமைக்கப்படும்

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். தமிழகத்தில் உள்ள சிறைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். பொது விநியோக திட்டத்தில் 2020- 21ல் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்குவது தொடரும்

3 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும், ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்

மேட்டூர் உபரி நீரை, சேலத்தில் வறண்ட பகுதிகளுக்கு மாற்றி விடும், சரபங்கா நீரேற்று பாசன திட்டத்தை செயல்படுத்த ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு – அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நிலமெடுக்க ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாய் அமைப்பு பணிகள் ரூ.2,298 கோடியில் மேற்கொள்ளப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பருவகால மாற்ற தழுவர் திட்டத்தை செயல்படுத்த ரூ.105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில்,1364 நீர்பாசன பணிகள் ரூ.500 கோடியில் மேற்கெள்ளப்படும்,

கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும், சீரமைக்க ரூ.5,439.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: நிதி ஒதுக்கீடு, பட்ஜெட்., முக்கிய திட்டங்கள் Categories: india news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *