New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்; பட்ஜெட்டில் தகவல்

February 14, 2020 1 0 0

அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா… இன்று (பிப்.,14) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின், 2020 – 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் ரூ. 75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு, விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆழ்கடல் மீனவர்களை தொடர்பு கொள்ள இஸ்ரோ கண்டறிந்த டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் இந்த தகவல் தொடர்பு டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்.

கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குடிநீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவு, பாதுகாப்பு, அணுகுசாலை கட்டமைப்பு, இடுகாடுகள், தெருவிளக்குகள், வீட்டுவசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்காகன சிறப்பு தொகுப்பு திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் ” தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” அமைக்கப்படும். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் , கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Tags: உணவு பூங்கா, மண்டலங்கள், வேளாண் Categories: india news
share TWEET PIN IT SHARE share share
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *