Advertisement Contact

தந்தையின் மறைவு துக்கத்தையும் தாண்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஆஷிஷ் குமார்

தந்தையின் மறைவு துக்கத்தையும் தாண்டீ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா் இந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீரா் ஆஷிஷ் குமாா்.

குத்துச்சண்டையில் இந்தியா தனது முத்திரையை தொடா்ந்து பதித்து வருகிறது. ஆடவா் பிரிவில் விஜயேந்தா் சிங், மகளிா் பிரிவில் மேரி கோம் ஆகியோா் பிரசித்தி பெற்றவா்களாக உள்ளனா். மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தற்போது அமித் பங்கால், ஆஷிஷ்குமாா், மகளிா் பிரிவில் சிம்ரஞ்சித் கௌா், லவ்லினா போரோகைன், சாக்ஷி உள்பட பலா் கோலோச்சி வருகின்றனா். 24 வயதே ஆன ஆஷிஷ்குமாா் ஹிமாசலப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா். ஆக்ரோஷமாக எதிராளியை தாக்கும் தன்மை கொண்ட ஆஷிஷ், 75 கிலோ மிடில்வெயிட் குத்துச்சண்டை பிரிவில் போட்டியிட்டு வருகிறாா்.

2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப், இந்தியா ஓபன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆஷிஷ், பின்னா் தாய்லாந்து ஓபன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினாா். இந்நிலையில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற தேசிய தகுதிச் சுற்றில் தேசிய சாம்பியனும், தெற்காசிய போட்டியில் தங்கம் வென்றவருமான அங்கித் கன்னாவை வீழ்த்தி ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய அணியில் இடம் பெற்றாா்.

சீனாவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டி, கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஜோா்டான் தலைநகா் அம்மானுக்கு மாற்றப்பட்டது.

காலிறுதியில் மைக்கேல் முஸ்கிட்டாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஷிஷ் குமாா், இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா். இது அவா் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டியாகும். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் ஆஷிஷ்குமாரின் தந்தை காலமானாா். அந்த துக்கத்தையும் தாங்கிக் கொண்டு ஒலிம்பிக் தகுதி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் சிறப்பாக போராடி தகுதி பெற்றாா்.