Advertisement Contact

கீர்த்திசுரேஷின் கலக்கல் புகைப்படம்; இணையத்தில் வைரல்

ரஜினி முருகன் படத்தில் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

ரஜினிமுருகன், ரெமோ, பைரவா உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் 2018ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் இவருக்கு மிக பெரிய பெயரை சம்பாதித்து தந்தது. இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இவரின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

இதில் அழகிய புடவையில் அனைவரின் கண்களை ஈர்க்கும் வகையில் தோற்றமளிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் இந்த புகைப்படம் ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.