Advertisement Contact

இயக்குனரும், நடிகருமான விசு இன்று மாலை காலமானார்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என்று பன்முக திறன் கொண்ட விசு உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று மாலை காலமானார்.

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் மற்றும் இயக்குனர் விசு. இவர் தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக தான் களம் இறங்கினார். ரஜினி நடித்த தில்லு முல்லு படத்திற்கு இவர் தான் வசனகர்த்தா.

தொடர்ந்து நடிகராகவும். இயக்குனராகவும் களம் இறங்கினார். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் மெகா ஹிட் படங்கள்தான். குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் படங்களை இயக்கினார். மிக முக்கியமாக இவர் இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தின் வெற்றியை பற்றி கூறவே வேண்டாம். 

மேலும் சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக வெற்றிக்கரமான முறையில் தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் விசுதான் என்றால் மிகையில்லை. 

இவர் நீண்ட நாட்களாக உடல்நலம் முடியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும்  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட விசு இன்று மாலை காலமானார். இதனால் கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது.