Advertisement Contact

கொரோனா வைரஸ் பரவலால் ஓராண்டுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைப்பு

ஓராண்டு ஒத்தி வைப்பு... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ஆக. 9ல் ஒலிம்பிக் போட்டி நடக்க இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், அனைத்து தகுதிச் சுற்றுகளும் ரத்தாகின. வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட முடியாமல் தவித்தனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து நட்சத்திரங்கள் உட்பட அந்த நாடுகளின் ஒலிம்பிக் கமிட்டியும் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இருப்பினும் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடக்கும் என கூறப்பட்டது. இதனிடையே பல்வேறு தரப்பில் இருந்து வந்த நெருக்கடிகளை அடுத்து, ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்கிடம், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விவாதித்தார். தவிர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொலைபேசி வாயிலாக ஷின்சோ அபேயிடம் பேச இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஒலிம்பிக்கை ஒரு ஆண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.