Advertisement Contact

தூரத்தில் நின்று குழந்தைகள், மனைவியிடம் இறுதி விடைபெற்ற  டாக்டர் ஹாதியோ அலி: உலக மக்கள் கண்ணீர்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்  டாக்டர் ஹாதியோ அலி. இவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது. மரணத் தருவாயில் தன் மனைவி, குழந்தைகளை தூரத்தில் நின்று இறுதி விடை பெற்ற அவரது புகைப்படம் உலக மக்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், தற்போது பல நாடுகளில் பலருக்கு பரவியிருக்கிறது. இதனால் பல உயிரிழப்பு ஏற்படுகிறதினால், இதனை கட்டுப்படுத்த உலகநாடுகள் பல முயற்சிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள மருத்துவர்கள் சிறப்பான முறையில் தங்கள் சேவைகளை ஆற்றி வருகின்றன.

அந்த மருத்துவர்களில் ஒருவர் தான் இந்தோனிஷிய டாக்டர் ஹாதியோ அலி. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர். இவருக்கும் இதே வைரஸ் தொற்று ஏற்பட்டு இறுதியில் தனது மரணம் வெகு அருகில் என்பதை உணர்ந்து, தனது இரு மகள்களையும் கர்ப்பிணியான மனைவியையும் தொலைவில் நின்று இறுதி விடைபெறும் டாக்டர் ஹாதியோ அலியின் புகைப்படத்தை அவரது கர்ப்பிணியான மனைவி படம் பிடித்துள்ளார்.

ஒரு அந்நிய நபரைப் போன்று தூரத்தில் நின்றே விடைபெறும் டாக்டர், தனது இறுதி சூழலிலும் குடும்பத்தினரை அருகில் வர அனுமதிக்கவில்லை!! இந்த புகைப்படத்தை பார்த்து உலக மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்து வருகின்றனர். 

கொரோனா பாதித்த பலருக்கு சிகிச்சையளித்து, இந்தினேஷியாவிற்கு மட்டுமின்றி உலகுக்கே ஹீரோவாக மாறியுள்ள டாக்டர் ஹாதியோ அலி இன்று தனது மரணத்தை தழுவினார்.