Advertisement Contact

கொழும்பில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என அறிவிப்பு

மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்... கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மாகாணம் மற்றும் புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும். மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை (26) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.