New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

மதரசா பாடசாலைகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை… அமைச்சர் தகவல்

August 20, 2019 76 0 0

நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது…மதரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்தகமே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் மத மற்றும் கலாசார விவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கரியவாசம் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு முன்மொழியப்பட்ட புதிய தேசிய கல்வி சட்டமூலமானது சர்வதேச பாடசாலைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கான சட்டங்களை விதிக்கும் என்றும் அவர் கூறினார்.

Tags: அமைச்சர்., சர்வதேச பாடசாலை, தேசிய கல்வி, பாடசாலை, மதரசா, முன்மொழியப்பட்டது Categories: Trend
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *