New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயத்துடன் சென்ற சிறுத்தை

September 15, 2019 74 0 0

முள்ளம்பன்றியை வேட்டையாட முயன்ற சிறுத்தை… நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. இங்குள்ள முத்தங்கா என்ற வனப்பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புக் கருதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சுல்தான் பத்தேரியில் இருந்து குண்டல்பேட் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலை அடைக்கப்பட்ட பிறகு வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை நடுவே சிறுத்தை ஒன்று முள்ளம் பன்றியை பிடிக்க பலமுறை முயன்றுள்ளது. இந்த காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் செல்போனில் பதிவு செய்தனர்.

முள்ளம் பன்றியின் உடலில் இருந்த முட்கள் சிறுத்தைக்கு இடையூறாக மாறிப்போனது. பயமின்றி சுற்றித்திருந்த முள்ளம் பன்றியை பல்வேறு கோணங்களில் வேட்டையாட முயற்சித்தும் சிறுத்தையின் போராட்டம் வீணாகிப் போனது.

முற்களால் சிறுத்தையின் வாயில் காயம் ஏற்பட்டதோடு ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தை ஏமாற்றத்துடன் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.

Tags: ஏமாற்றம், சிறுத்தை, போராட்டம், முள்ளம்பன்றி, வாயில் காயம் Categories: viral video
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *