New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து குழந்தைகளை அசத்துங்கள்!!!

February 14, 2020 3 0 0

குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்கள் செய்யலாம். அதில் சாக்லேட் இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு – அரை கப், சாக்லேட் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10 (சிறிதாக நறுக்கவும்), நெய் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, தண்ணீர் – 1 கப்.

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும். பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.

பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags: இடியாப்பம், சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு Categories: womens-tips
share TWEET PIN IT SHARE share share
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *