New Ocean Supermarket
Flash News
   வாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி   பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்

கோவிட்-19 பாதிப்பிலும் மனைவியை கவனித்துக் கொள்ளும் முதியவர்

February 14, 2020 4 0 0

சீனாவில் ‘கோவிட்-19’ என பெயிரிடப்பட்டுள்ள, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான கணவன், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு அளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சீன நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் டுவிட்டர் பக்கத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீடியோ வெளியிடப்பட்டது. அதில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை பார்க்கிறார்.

அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார். இருவரும் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த வயதிலும் மனைவிக்கு உதவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில், நோய் பாதித்த மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் காதலும் வீடியோவை பார்க்கும் அனைவர் மனதையும் கரைத்துவிடுவதாக உள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ், ஒவ்வொரு நாளும் நான் உன்னை நேசிப்பேன் என குறிப்பிட்டுள்ளது. வைரலான இந்த வீடியோ மூலம், இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பலரும் பதிலளித்துள்ளனர்.

Tags: கோவிட்-19 பாதிப்பு, மனைவி, முதியவர் Categories: headlines, world-news
share TWEET PIN IT SHARE share share
Related Posts
Leave a reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *